வவுனியா ஏ9 வீதியில் இருந்த பிரித்தானியர் காலத்து மரங்கள் அகற்றல்

வவுனியா – ஏ9 வீதியில் விழும் நிலையில் காணப்படும் பிரித்தானியர் கால மரங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் நாட்டப்பட்ட பல வாகை மரங்கள் வீதியின் இரு மருங்கிலும் காணப்படுகின்றன.

இவை பயணிகளின் நிழல் தரிப்பிடங்களாகவும், சில நடமாடும் வியாபாரிகளின் வியாபார இடங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், அதில் உள்ள 16 வாகை மரங்களில் 9 மரங்கள் உயிர்ப்பிழந்து விழும் நிலையில் காணப்பட்டன.

இவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முறிந்து விழலாம் என மக்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அவை தற்போது அகற்றப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் மீண்டும் புதிய மரங்களை நடுவதற்கும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like