யாழில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தம்! 23 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் தற்போது எந்த பக்கம் திரும்பினாலும், வாள் வெட்டும், குழுக்களுக்கிடையே மோதலும், பெற்றோல் குண்டு வீச்சும் அதிகரித்து காணப்படுகின்றது.

சாதாரண நாட்களில் பட்டப்பகலில் வந்து வெட்டும் வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசங்கள் பண்டிகை காலங்களில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன.

அந்த வகையில் நேற்று உலகளாவிய ரீதியில் இந்துக்கள் தீபாவளியை கொண்டாடியுள்ளார்கள்.

நேற்று மட்டும் யாழ்ப்பாணத்தில் 23 பேர் வாள் வெட்டு மற்றும் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட 23 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 23 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு பகுதிகளிலும் வாள் வெட்டு மற்றும் மோதல்கள் ஏற்பட்டிருந்ததாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like