கனகராயன்குளத்தில் கேரளா கஞ்சாவுடன் நால்வர் கைது

கனகராயன்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியுடைய கேரளா கஞ்சாவுடன் நால்வரை பொலிஸ் கைது செய்துள்ளனர்.

கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி சமிந்த பிந்து அவர்களின் தலமையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி அசேல அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் சார்ஜன்  வீரசிங்க (32535) , பொலிஸ் கோஸ்தாபர் விஜயசிறி (86791 )ஆகிய பொலிஸாரினால் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக கார் வாகனத்தினை கனகராயன்குளம் பகுதியில் வைத்து சோதனையிட்ட சமயத்தில் வாகனத்திலிருந்து 9கிலோ 732கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாகனத்தில் சாரதி உட்பட நால்வரை ( வயதுடைய – 28,28,28,33) பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்ட சமயத்தில் குறித்த நான்கு நபர்களையும் எதிர்வரும் 23ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்திரவிட்டார்.

 

You might also like