வவுனியாவில் கண்மூடிதனமானமாக இளைஞர்கள் குழு வாள்வீச்சு தாக்குதல்

வவுனியா பண்டாரிகுளம் (டிரான்ஸ் போமர் சந்தி) பகுதியில் வாள் வீச்சு இடம்பெற்றதில் வியாபார நிலையம் ஒன்று உட்பட மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்று (19.10.2017) இரவு 7.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்றே குறித்த வாள் வீச்சினை மேற்கொண்டுள்ளதுடன் சீர்த்திருத்தம் மைதானத்தில் நின்ற இளைஞர் குழு மீதும் கண்மூடிதனமான வாள்வீச்சு மேற்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளனர்

வாள்வீச்சை மேற்கொண்டவர்கள் வீதியில் பயணித்த பொதுமக்கள் மீதும் வாள் வீச்சை மேற்கொண்டுள்ளனர் இதில் இரண்டு முச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி சாரதி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதேவேளை வாள் வீச்சை மேற்கொண்டவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது

குறித்த வாள் வீச்சை மேற்கொண்டவர்கள் கூமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்

இதில் குறித்த வியாபார நிலையம் மற்றும் வியாபார நிலையத்திற்கு வந்த நபர் ஒருவருடைய மோட்டார் சைக்கிள் மீதும் வாளால் வெட்டியதில் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை தீபாவளி தினத்தன்று மதகுவைத்த குளம் பகுதியில் ஏற்பட்ட வாள்வீச்சில் பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

You might also like