வன்னேரிக்குளத்தில் ஒப்பந்தங்கள் விரைவாகவும் நேர்த்தியாகவும் முடிக்கப்படவேண்டும்

கடந்த 19.01.2017 காலை 10 மணியளவில் கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அங்கு அமைக்கப்படும் வன்னேரிக்குளம் நன்னீர் மீன்பிடி சங்கத்திர்க்கான மீனவர் ஓய்வு மண்டபத்தின் வேலைத்திட்டத்தை பார்வையிட்டார்.

குறித்த கட்டடமானது வடமாகாண மீன்பிடி அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்போது அங்கு பிரசன்னமாகி இருந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஒப்பந்தகாரருக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கும்போது, ஒப்பந்தகாரர் குறித்த வேலைத்திட்டத்தை விரைவாகவும் நேர்த்தியாகவும் முடித்துக்கொடுக்க வேண்டுமெனவும் பணித்ததோடு, பின்னர் அங்கு குளக்கரையில் முதலமைச்சரின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஊடக அமைக்கப்படும் சுற்றுலா மையத்தையும் பார்வையிட்டார்.

 

You might also like