வவுனியா கற்பகபுரம் பகுதியில் ஏற்பட்ட வாள் வீச்சில் பத்து வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம் 

வவுனியா கற்பகபுரம் பகுதியில் ஏற்பட்ட வாள் வீச்சில் பத்து வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

நேற்று(19.10.2017) வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம்  கிராமத்தில் மரணவீட்டின் 45வது நாளிற்குரிய சடங்கின் போது திடீர் என அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று கண்மூடித்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இவ் வாள் வீச்சில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து வயது சிறுவனான தர்சன் உட்பட ஜனுசன்,கபில்ராஜ்,யசோதா,ஜதுசன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை வவுனியா மதகுவைத்த குளம் மற்றும் பண்டாரிகுளம் பகுதியிலும் வாள் வீச்சு இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

You might also like