வவுனியாவில் ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பாதுகாப்பு பாதுகாப்பு தீவிரம்

உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமால் லான்சா அவர்களதும்  உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன  அவர்களதும் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களது பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலமையில் இன்று (21.10.2017) காலை 9.00மணிக்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரில் ஆரம்பமாகவுள்ளது.

அதனையடுத்து வவுனியா மத்திய பேரூந்து நிலையம் , மணிக்கூட்டுச்சந்தி , புகையிரத நிலைய வீதி , நூலக வீதி, பூங்கா வீதி , நகரசபை வீதி , ஏ9 வீதி போன்ற பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் , சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு செல்லும் பாதையனைத்தும் மூடப்பட்டதுடன் அதிகாரிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டடுள்ளது.

You might also like