சற்று முன் வவுனியா வந்தடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமால் லான்சா அவர்களதும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களதும் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களது பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலமையில் இன்று (21.10.2017) சற்று முன் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி அவர்களினால் பாடசாலை வளாகத்தில் மரம் நாட்டல் வைபவத்துடன் ஆரம்பாகி மாணவர்களின் தேசிய கீதத்துடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட செயலாளர் , பிரதேச செயலாளர் , அரச உத்தியோகத்தர்கள்  என ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள் :- வவுனியாவில் இரு பிரபல பாடசாலைகளுக்கு கேட்போர் கூடம் : மைத்திரிபால சிறிசேன

வவுனியாவில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை புறக்கணித்த மைத்திரி

 

You might also like