கிளிநொச்சி தருமபுரத்தில் பெறுமதி மிக்க மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு
கிளிநொச்சி – தர்மபுரம் நோக்கி எடுத்து செல்லப்பட்ட பெறுமதி மிக்க மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மரக்குற்றிகள் நேற்று இரவு 9.30 மணியளவில் தர்மபுரம், நெத்தலியாறு பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைய மேற்கொண்ட சோதனையின் போது குறித்த மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட மது ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இம்மரக்குற்றிகளும், வாகனம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது, இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், இன்றைய தினம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.