வவுனியாவில் இரு பிரபல பாடசாலைகளுக்கு கேட்போர் கூடம் : மைத்திரிபால சிறிசேன

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (21.10.2017) நடைபெற்ற ஜனாதிபதியின் நில மெஹவர எனும் நடமாடும் சேவைக்கு வருகை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது உரையின் போது வவுனியாவில் இரு பாடசாலைகளுக்கு கேட்போர் கூடம் அமைத்து தருவதாக வாக்குறிதியளித்தார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

நான் இந்த பாடசாலைக்கு வந்ததன் பிறகு இந்த பாடசாலையில் இருக்கக்கூடிய குறைபாடுகள் சம்பந்தமாக இந்த வித்தியாலயத்தின் அதிபர் அவர்கள் எனக்கு கூறினார். அவர் அந்த வேண்டுகொள் கடிதத்தினை வந்து எனது பக்கத்தில் அமர்ந்து இவற்றுள் பல்வேறு விதமான வேண்டுகொள்கள் இருக்கின்றன. ஆனால் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒரு வேண்டுகொள் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

அதன் பிறகு அங்காலே சென்று பிரதமர் மந்திரி அவர்களின் கண்டு அவருக்கு அருகே அமர்ந்து அப்படியான ஒரு வேண்டுகோளை விடுத்தமையை நான் கண்டேன். நானும் பிரதம அமைச்சரும் பேச்சுவார்தை நடத்தி அவரின் அந்த வேண்டுகோளில் முதலாவது வேண்டுகோளை இப்போதே வழங்குவதற்கு தீர்மாணித்துள்ளோம். அந்த முதலாவது வேண்டுகோள் தான் இந்த பாடசாலைக்கு ஒரு கேட்போர் கூடம் வேண்டும் என்றார்கள் அதை நாங்கள் பெற்றுத்தருவோம்.

அதே போன்று முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் அவர்கள் என்னை சந்தித்து பேசினார். இதற்கு அப்பால் அமைந்துள்ள ஒரு பாடசாலை அது ஒரு ஆண்கள் பாடசாலை அங்கும் ஒரு கேட்போர் கூடம் இல்லை இங்கு 3000மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என தெரிவித்தார். அந்த பாடசாலைக்கும் ஒரு கேட்போர் கூடத்தினை வெகு விரைவில் அமைத்துத்தருவேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள் :- சற்று முன் வவுனியா வந்தடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

வவுனியாவில் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை புறக்கணித்த மைத்திரி

You might also like