அக்கராயன், வட்டக்கச்சி வைத்தியசாலைகளின் புதிய கட்டடங்கள் திறந்து வைப்பு

கிளிநொச்சி – அக்கராயன் மற்றும் வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் தொகுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்டடத் தொகுதிகள் நேற்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலனால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

64 மில்லியன் ரூபா செலவில் , வைத்தியசாலைக்கான உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் குறித்த கட்டடத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

இதன்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் கருத்து தெரிவிக்கையில்,

பிரதேச வைத்தியசாலைகளின் தேவைகள் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அமைச்சர் என்ற வகையில் என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இந்த பிரதேசங்களுக்கு வைத்தியர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அரியரத்தினம் பசுபதிபிள்ளை மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் சி. மைதிலி மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

You might also like