கிளிநொச்சியில் மாணவர்கள் பாடசாலைகளை விட்டு இடைவிலகல் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில், பாடசாலைகளை விட்டு இடைவிலகிய அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக்கொண்ட மாணவர்கள் தொகை அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமங்களில், பாடசாலைகளை விட்டு இடைவிலகிய அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக்கொண்ட மாணவர்களின் தொகை அதிகளவில் காணப்படுகின்றது.

குறிப்பாக கண்டாவளைப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள, கோரக்கன்கட்டு, உழவனூர், தருமபுரம், முசிரம்பிட்டி, கல்மடுநகர் ஆகிய பகுதிகளிலும் கரைச்சி, பன்னங்கண்டி, ஊற்றுப்புலம், சாந்தபுரம், கோணாவில், யூனியன்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாரதிபுரம், மலையாளபுரம், அறிவியல்நகர், பொன்னகர் உள்ளிட்ட பகுதிகளிலும், பாடசாலைகளுக்குச் செல்லாத அல்லது இடைவிலகிய மாணவர்களின் தொகை அதிகளவில் காணப்படுகின்றது.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணிபுரியும் பெற்றோர்களின் பிள்ளைகளே, அதிகளவில் இவ்வாறு பாடசாலைகளை விட்டு இடைவிலகிய நிலையில் காணப்படுகின்றனர்.

அத்துடன், பின்தங்கிய பகுதிகளில் உள்ள ஆரம்பப்பாடசாலைகளில் கல்வி கற்று புதிய கல்வியாண்டில் வேறுபாடசாலைகளுக்கு செல்லவேண்டிய மாணவர்களும் இவ்வாறு பாடசாலைகளுக்குச் செல்லாத நிலையில் உள்ளனர்.

இவ்வாறு காணப்படும் சிறுவர்கள் விடயத்தில், உரிய அதிகாரிகள் கவனமெடுத்து இவர்களை மீளக்கற்றலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என சமூக கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like