கிளிநொச்சியில் ஆசிரிய வள நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் சுமார் 27.78 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாவட்ட ஆசிரிய வள நிலையத்தின் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனையின் நீண்டகால குறைப்பாடாக காணப்பட்ட ஆசிரிய வள நிலையத்திற்கான இரண்டு மாடிக்கட்டடத்தின் கட்டுமானப்பணிகளே தற்போதும் தொடர்ந்து வருகின்றன.

1900 வரையான ஆசிரிய ஆளணியை கொண்ட கிளிநொச்சி கல்வி வலயத்தின், குறித்த ஆசிரிய வள நிலையத்தின் கட்டுமானப்ணிகள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆசிரிய வள நிலையத்தினை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனைகள் பெறப்பட்டு, தூர நோக்குடைய மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால், கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இக்கட்டடடம் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like