வவுனியாவில் இரண்டு தினங்களாக கடும் மழை : சந்தோசத்தில் மக்கள்

வவுனியாவில் நேற்று (24.01.2017) மாலையிலிருந்து கன மழை பெய்து வருகின்றது.

பெய்துவரும் கன மழையினால் மக்களுடைய இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டள்ளதுடன் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கின்றதுடன் குளிருடனான கால நிலை நீடித்தும் காணப்படுகின்றது.

பாடசாலையில் மாணவர்களின் வருகையும் குறைந்து காணப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக வடக்கில் வரட்சியால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like