விசுவமடு பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது
விசுவமடு ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசுவமடு பிரமந்தநாறு ஆற்றுப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த நபர்களை இன்று கைது செய்து, கிளிநொச்சி தருமபுர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.