கிளிநொச்சி – தொண்டமான்நகர் பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு
>கிளிநொச்சி – தொண்டமான்நகர் பகுதியில் 14 கிலோ அளவிலான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.தொண்டமான்நகர் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சா பொதி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைய கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னின் தலைமையிலான விசேட மது ஒழிப்பு பிரிவினரினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.