வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் வங்கி ஊழியர் சடலமாக மீட்பு

வவுனியா மில் வீதியில் இன்று (21.10.2017) இரவு 8.30மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் வங்கி ஊழியரோருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பில் அரச வங்கியோன்றில் பணிபுரியும் வவுனியாவை சேர்ந்த கிருபராசா ஜெசுதாஸ் (வயது- 33) என்பவர் நேற்றையதினம் வவுனியாவிற்கு வந்துள்ளார். 

இன்று மாலை நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் இரவு வீட்டில் அனைவரும் தேவாலயத்திற்கு சென்ற சமயத்தில் வீட்டில் கடிதம் எழுதிவிட்டு தூக்கி தொங்கியுள்ளதாவும், நாங்கள் வீடு திரும்பிய சமயத்தில் ஒர் அறையில் கடிதமும் இன்னோரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டார். அதனையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் வீட்டார் தெரிவித்தனர்

தற்போது குறித்த நபரின் வீட்டில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like