வவுனியாவில் “வவுனியா பசங்க” அமைப்பினாரால் மாபெரும் சிரமதானப்பணி

“பத்தினீயம் அற்ற வவுனியாவை உறுவாக்குவோம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று (22.10.2017) காலை 8.30 மணி முதல் 12.00மணி வரை “வவுனியா பசங்க” அமைப்பினரால் வவுனியா வைரவப்புளிங்குளம் சிறுவர் பூங்கா வீதி , நகரசபை ஊழியர் விடுதி வீதி என்பற்றில் வவுனியா நகரசபையின் அனுசரணையுடன் மாபெரும் சிரமதானப்பணி முன்னேடுக்கப்பட்டது.

தற்போது வவுனியா நகரில் பாத்தினீயம் அதிகரித்து காணப்படும் இந் நிலையில் வவுனியா மாவட்ட இளைஞர்களினால் உறுவாக்கப்பட்ட ‘ வவுனியா பசங்க ‘ அமைப்பினர் இவ்வாறான சமூக சேவைகளில் ஈடுபட்டடுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

இவ் அமைப்பினரின் சிரமதான பணிக்கு ஒத்துளைப்பு வழங்கும் முகமாக த எவர் கிறீன் பரடைஸ் உணவகத்தினால் தேனீர் வழங்கப்பட்டதுடன் பொதுமகன் நந்தன் அவர்களினால் குளிர்பாணமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விஜய்க்கு பாரிய பணத்தினை செலவழித்து பாதாதைகள் வைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு இளைஞர்களா என அனைவரும் பார்வையும் ‘வவுனியா பசங்க’ அமைப்பினர் மீது திரும்பியுள்ளது.

You might also like