வவுனியாவில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டி.

வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் 2014ம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜீட் கஜன் , சாந்தன் ஆகியோரின் 15 ஆவது நிறைவை முன்னிட்டும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (21.10) இரவு போட்டியாக 7.30 மணியளவில் வைரவர்புளியங்குளம் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.

இப்போட்டியில் வவுனியா யங்ஸ்ரார் அணியினரும், கோல்டன் பிரதர்ஸ் அணியினரும் பலபரீட்சையில் மோதின. மேலும் இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் 1 : 1  என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்தனர். இடைவேளையின் பின்னரான ஆட்டம் விறுவிறுப்பை பெற்றது. போட்டி முடிவடைவதற்கு 10 நிமிடங்கள் முன்பதாக யங்ஸ்ரார் அணி இன்னுமோர் கோலினை போட்டு  அணியினை முன்னிலைப்படுத்தினர். கோல்டன் பிரதர்ஸ் அணியினர் கடுமையாக போராடியும் கோல்களை போட முடியவில்லை போட்டி நிறைவில் யங்ஸ்ரார் அணியினர் 2 : 1 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்று சம்பியன் பட்டத்தை தமதாக்கிக் கொண்டனர்.

இப்போட்டியிற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விநோரோதரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன்,  தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவரும் யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபர்களில் ஒருவருமான சந்திரகுமார் கண்ணன், சிறீரெலொ கட்சியின் இளைஞரணி தலைவர் ப.கார்த்திக், வவுனியா துடுப்பாட்ட சம்மேளனத்தின் தலைவர் யோ.ரதீபன், துடுப்பாட்ட நடுவர் சங்கத்தின் செயலாளர் அ.ரவிநாத், மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ராஜன், மின்சாரசபை பொறியியலாளர் திலீபன், பொறியியலாளர் எஸ்.சிறீஸ்கந்தராசா,  இறைபணி செம்மல் வை.செ.சேனாதிராசா, கடை உரிமையாளர்கள்,விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

மேலும் இந் நாளை நினைவு கூரும் முகமாக நடாத்தப்பட்ட ஆண் , பெண் இருபாலாருக்குமான பட்மின்ரன் மற்றும் கடினபந்து, சிறந்த கோல் காப்பாளர், சிறந்த வீரர்களுக்கான நினைவு பரிசில்களும்  இறுதியில் வெற்றிபெற்றவர்கட்கு காசோலையும் கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

You might also like