வவுனியா பேரூந்து நிலையத்தில் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் யாழ் இளைஞன் கைது

வவுனியா, பேரூந்து நிலையத்தில் 2 கிலோ 136 கிராம் கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வவுனியா மதுஒழிப்பு பிரிவுப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் பேரூந்தில் பயணித்த இளைஞன் ஒருவரின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த வவுனியா மது ஒழிப்பு பிரிவுப் பொலிசார் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனின் பையினை சோதனை செய்த போது அதில் 2 கிலோ 136 கிராம் கேரளா கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளைஞரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த கஞ்சா இந்தியாவின் தெலுங்குப் பத்திரிகை ஒன்றில் பொதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like