யாழ். அரியாலை துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் பலி!

யாழ். அரியாலைப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.

இதனை வைத்தியசாலை பணிப்பாளர் பா. சத்திய மூர்த்தி உறுதி செய்துள்ளார்.

உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தற்போது யாழ்.போதனா வைத்தியசாலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

இளைஞரின் உறவினர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like