வவுனியா ஒமந்தை பகுதியில் டிப்பர் தடம்புரண்டு விபத்து

வவுனியா ஒமந்தை இறம்பைக்குளம் பகுதியில் இன்று (23.10.2017) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஏ9 வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒமந்தை இறம்பைக்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதுண்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like