வவுனியாவில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு: பெண்ணொருவருடனான தொடர்பே காரணம்

பெண்ணொருவருடனான தொடர்பின் காரணமாக ஏற்பட்ட பிணக்கினோலேயே வவுனியாவில் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குடியிருப்பு பகுதியில் கடந்த சனிக்கிழமை கத்திக்குத்திற்கு உள்ளாகி உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குடியிருப்பு பகுதியில் சலவைக்கடை நடத்திவரும் இ.தங்கராஜா (வயது 56) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்ததுடன், சந்தேகத்தின் அடிப்படையில் அயல்கடைக்காரரொருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சடலத்தை மீட்டிருந்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த வவுனியா பொலிஸார், பெண்ணொருவருடனான தொடர்பின் காரணமாக ஏற்பட்ட பிணக்கினோலேயே இந்த சம்பம் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like