கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட காணியை அபகரிக்க முயற்சி

விடுதலைப்புலிகளின் தளபதிகளால் கொள்வனவு செய்யப்பட்ட காணியை அபகரிக்கும் முயற்சியில் நபரொருவர் ஈடுபட்டுள்ளதாக திருநகர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது எல்லைப்பரப்பில் இருக்கக் கூடிய ஒரு காணி சம்பந்தமான பிணக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

அந்த காணி அடிப்படையிலேயே சுபைர் என்ற முஸ்லிம் நபரொருவருக்கு சொந்தமானது. அந்த காணி பின்னர் விடுதலை புலிகளின் உயர் மட்ட தளபதிகளால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

தற்பொழுது விற்றவரும், வாங்கியவரும் இல்லாத சூழ்நிலையியே மூன்றாவது நபரொருவர் இந்த காணிக்குள் நுழைந்துள்ளார்.

அத்துடன், இந்த காணி மாத்திரமல்லாது அதனை சுற்றியுள்ள மூன்று காணிகளையும் இணைத்து ஒரு காணியாக்கி அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக நாம் பிரதேச செயலாளருக்கு தெரிவித்து குறித்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

ஆனால் அண்மையில் ஜனாதிபதி வந்த அன்றைய தினம் மீண்டும் அந்த காணியை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தேன். இதன்போது குறித்த நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கூறியிருந்தார்.

இதனடிப்படையில் நான் அங்கு சென்ற போது என்னையும், என்னுடன் வந்தவர்களையும் மதிக்காத வகையில் அடாவடித்தனமான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.

 

You might also like