வவுனியாவில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனுக்கு நடந்த கொடூரம்.

இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த தமிழ் இளைஞனை தங்களது வீட்டுக்கு அழைத்து வீட்டில் பெண்ணின் உறவினர்களால் வீட்டினுள் வைத்து கடுமையாக தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவரது மகளை காதலித்த தமிழ் இளைஞன் ஒருவன் அந்த பெண்ணை சட்டப்படி திருமணம் செய்து சில நாட்கள் ஹற்றனில் தங்கியிருந்துவிட்டு வவுனியாவிற்கு மீண்டும் வந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு மௌளவி ஒருவரின் உதவியுடன் இஸ்லாமிய முறைப்படியான திருமணத்தையும் முடித்து இளைஞனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

குறித்த மௌளவியின் உணவகத்திற்கு அடிக்கடி செல்லும் பெண்ணின் தந்தையான பிரபல வர்த்தகர் தனது மகளையும் மருமகனான தமிழ் இளைஞனையும் தனது வீட்டில் தங்க வைக்குமாறு கேட்டதை நம்பிய மௌளவி அவர்களை அழைத்து வந்து அங்கு தங்க வைத்து தமிழ் இளைஞனுக்கு சுண்ணத்து என்று சொல்லப்படுகின்ற சடங்கும் செய்த பின் நேற்றிரவு குறித்த இளைஞனையும் பெண்ணையும் பெண்ணின் அண்ணன் மற்றும் அக்காவின் கணவனான கல்விநிலைய உரிமையாளர் உள்ளிட்ட மூவர்கடுமையாக தாக்கிய நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை விசாரித்த பொலிஸார்  தாக்கிய மூவரையும் கைதுசெய்த நிலையில் குடும்ப நிர்ப்பந்தம் காரணமாக திடீரென கட்சி மாறிய குறித்த பெண் தனது உறவினர்களை காப்பாற்றுவதற்காக தன்னை அந்த தமிழ் இளைஞன் தாக்கியதாக கூறி அந்த இளைஞனையும் கைது செய்து இரண்டு பகுதியினரையும் பிணையில் செல்ல பொலிஸ் அனுமதித்துள்ளது.

அத்துடன் அந்த பெண் தனது கணவரை விட்டு தனது குடும்பத்தினருடன்சென்றுள்ளது . பாதிக்கப்பட்ட இளைஞன் அவசரஅவசரமாக வைத்திய சாலையிலிருந்து வெளியேற்றப்பட்டமையினால் போதிய சிகிச்சையின்றி இரத்தம் சொட்ட சொட்ட தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார் .

இச் சம்பவம் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியில் கசியாமல் பார்க்கப்பட்டு வந்த போதும் ஒருவழியாக எமக்கு இத்தகவல்கள் கிடைக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த செய்தி பதிவேற்றப்படுகின்றது.

வவுனியாவில் வாழும் இரண்டு இனங்களில் ஒற்றுமையினை கருத்திற்கொண்டு சிலவற்றை நாகரீகமாகவும் ஊடக பொறுப்போடும் இந்த செய்தியில் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

You might also like