கிளிநொச்சியில் கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையில், இயக்கச்சி பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பிரினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் 32 வயதுடையவர் எனத் தெரிவித்த பொலிஸார், 4.70 கிலோ கிராம் கஞ்சாவை அப்பெண் தன் வசம் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

You might also like