முல்லைத்தீவில் வறட்சி : சிக்கலில் 298 குடும்பங்கள்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் குடிநீர் கிணறுகள் வற்றியுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் குடிநீர் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

பூர்வீக நிலங்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படாத நிலையில் 298 வரையான குடும்பங்கள் கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் உள்ள 298 குடும்பங்களின் தண்ணீர்த் தேவைகளுக்கு அமைக்கப்டப்ட பதினொரு பொதுக்கிணறுகளும் நீர் வற்றிக் காணப்படுகின்றன.

 

இதைவிட ஏழு குழாக்கிணறுகளில் நான்கு கிணறுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இதனால், இங்கு வாழும் 298 வரையான குடும்பங்களும் குடிநீர் முதல் கொண்டு ஏனைய தேவைகளுக்கான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் எந்த வறட்சிக்காலங்களிலும் தாக்குப்பிடிக்கக் கூடிய கிணறுகளையும் வசதிகளையும் கொண்டு வாழ்ந்தோம்.

 

ஆனால், தற்போது, எங்கள் நிம்மதிகளை சிதைக்கும் வகையிலும் நலன் புரிநிலையத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதனால், குடிநீர் முதல் தொடங்கி தொழில் வாய்ப்பு வாழ்வாதாரம் எல்லாவற்றுக்கும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்யுள்ளதாக இப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like