முல்லைத்தீவில் படையினர் வசமிருந்து மீட்கப்பட்ட நிலங்களில் உள்ள குளங்கள் புரனரமைக்கப்பட வேண்டும்
முல்லைத்தீவு – ஒலுமடு கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள நீண்ட காலமாக புனரமைக்கப்படாது இருக்கின்ற குளத்தினைப்புனரமைத்து தருமாறு முறிகண்டி இந்து புரம் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் கீழ் உள்ள 132 ஏக்கர் வயல் நிலங்களில் குறிப்பிட்ட பகுதி இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
இப்பகுதியில் தற்போது வயல் நிலங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்ற போதும் குளம் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
முறிகண்டி, இந்துபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இக்குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் பயிர் செய்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்ததை அடுத்து 2012ஆம் அண்டு வரைக்கும் இப்பகுதி வயல் நிலங்கள் படையினர் வசமிருந்து பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அக்காலக்கட்டத்தில் சேதமடைந்த குளங்கள் இதுவரை புனரமைக்கப்படாது கைவிடப்படாது நிலையில் காணப்டுகின்றது.
எனவே, குறித்த குளத்தினை புனரமைத்துத் தருமாறும் இதன்மூலம் இந்த வயல் நிலங்களை சீர் செய்து பயிர் செய்கை மேற்கொள்ளமுடியும் என்றும் இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.