வவுனியா – செட்டிக்குளம், மாணிக்கம் பண்ணை கிராமத்திற்கான நுழைவாயில் திறப்பு

வவுனியா – செட்டிக்குளம், மாணிக்கம் பண்ணை கிராமத்திற்கான நுழைவாயில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் இணைந்து நுழைவாயிலை திறந்து வைத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில் குறித்த கிராமத்திற்கான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச சபைச் செயலாளர், அப்பகுதி கிராம அலுவலர், மதகுருமார், கிராம மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like