வவுனியாவில் மாதா சொரூபம் விஸமிகளால் தாக்கப்படவில்லை

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் அமைக்கப்பட்ட கண்ணாடி பெட்டி விஸமிகளால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டபோது, அவ்வாறான சம்பவங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மாதா சொரூபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒளி விளக்கிலிருந்து வெளியாகிய அதிக வெப்பம் காரணமாக கண்ணாடி வெடித்துச் சிதறியுள்ளதாகவும் இது திட்டமிட்ட நடவடிக்கை இல்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like