வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளி கட்டமைப்பின் ஆசிரியர் தின விழா – 2017

வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளி கட்டமைப்பின் ஆசிரியர் தின விழா மதவு வைத்தகுளம் சென் சுலான் முன்பள்ளியில் கட்டமைப்பின் தலைவர் நா.ஸ்ரீதரன் தலைமையில் நேற்று (24.10.2017) சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீரெலோ அமைப்பின் இளைஞர் அணித்தலைவர் கார்த்திக் , முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் கோ.தர்மபாலன் , கௌரவ விருந்தினர்களாக முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் சி.அருள்வேல்நாயகி, சென்சுலான் முன்பள்ளி இயக்குனர் பியரத்தினா தேரோ, ஞானம் முன்பள்ளி முகாமைத்துவ குழுத்தலைவர் அன்ரனி ரெக்ஷன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது முன்பள்ளி ஆசிரியர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன

You might also like