வவுனியாவில் விரைவில் 24மணி நேர துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் : நகரசபை செயலாளர்

வவுனியா நகரசபைக்குச் சொந்தமான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலுள்ள துவிச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் தற்போது வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அப்பகுதியில் துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் ஒன்றை நிறுவுவதற்கு உதவியாக முதற்கட்டமாக அப்பகுதியிலுள்ள வியாபார நிலையங்களை அகற்ற குறித்த வர்த்தக நிலைய இடத்திற்கு சென்ற வவுனியா நகரசபை செயலாளர் ஆர. தயாபரன் அப்பகுதி வியாபார நிலைய உரிமையாளர்களிடம் நட்புரீதியில் கலந்தரையாடலை மேற்கொண்டதுடன் ஒரு குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டு அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விரைவில் இவ்விடத்தில் 24மணிநேர துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் அமைப்படும் என நகரசபை செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

You might also like