சற்று முன் கிளிநொச்சி  55ம் கட்டை சந்தியில் ரயில் விபத்து : ஒருவர் பலி

சற்றுமுன் கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவஇடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப் புகையிரதமும்புகையிரதக் கடவையை கடக்க முற்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்தில்பலியாகியுள்ளத்தாகவும் விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் எதனையும் உடனேபெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்   க . கிருபாகரன் தெரிவிகின்றார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like