வவுனியா பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரைவவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குள பிரதேசம், அவறந்துலாவ, பழையன் ஊர், கண்டி வீதி(ஏ-09 வீதி), 1 ஆம் மற்றும் 2 ஆம் குறுக்குத் தெரு, மதவு வைத்த குளம், மூன்று முறிப்பு, தவசிக்குளம், குட்செற் றோட், தோணிக்கல், பண்டாரிக்குளம், ஈரப்பெரிய குளம், வேரகம, கற்குண்டமடு.

மற்றும் அலுத்கம, அழகல்ல, பகல அழுத்வத்த, புபுதுகம, குருந்துப்பிட்டிய, பூ ஓயா படை முகாம், ஈரப்பெரிய குளம் படை முகாம், ஈரப்பெரிய குளம் SLBC, கார்கில்ஸ் பூட் சிற்றி, மண்டெரின் ஆடைத் தொழிற்சாலை, Kowloom ஆடைத் தொழிற்சாலை, குளோப் அரிசி ஆலை, விமானப்படை இராணுவ முகாம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் நாவற்காடு பகுதியிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like