வவுனியாவில் முதன் முதலாக ஆதிவாசிகளின் துடுப்பாட்ட சுற்றுபோட்டி!
வவுனியாவில் இலங்கையின் ஆதிவாசிகளின் தூப்பாட்ட அணி முதன் முதலாக எதிர்வரும் 28.10.2017 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாக உள்ள துடுப்பாட்ட சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது.
சமாதானமும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் என்ற தொணியில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் பணிப்புரைக்கிணங்க வவுனியா தலமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி அவர்களின் தலமையில் குறித்த சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் இலங்கை ஆதிவாசிகளின் அணி,வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அணி,வவுனியா பொலிஸ் அணியினர் கலந்து கொள்ளவுள்ளனர்.