கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

கிளிநொச்சி – பிரமனந்தனாறு குளப்பகுதியிலிருந்து நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்திரலிங்கம் சந்திரகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like