குடிநீர் விநியோகம் தொடர்பில் கோரிக்கை விடுக்கவும் – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்

குடிநீர் தேவைகள் தொடர்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பல கிராமங்களில் குடிநீத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், சில கிணறுகளில் குடிநீர் வற்றிக்காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஒரு சில கிணறுகளில் நீர் நிறம் மாறிக்காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த, விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன் கருத்துத் தெரிவிக்கும் போது,

பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஏழு கிராம அலுவலர் பிரிவுகளில் தற்போது குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், குடிநீர் விநியோகம் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைக்குமிடத்து மேலதிகமாக குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like