கிளிநொச்சியில் உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 873 ஹெக்டயரில் உப உணவுச் செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள போதும், தற்போதைய வறட்சியால் எண்பது ஹெக்டயர் வரையான நிலப்பிலேயே உபஉணவுச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் வாழும் மக்களின் அதிமான மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
கூடுதலான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்ற போதும், உபஉணவுச் செய்கை மற்றும் தோட்டச்செய்கையில் விவசாயிகள் ஆர்வம் குறைந்து வருகின்றது.
இந்நிலையில் இவற்றை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களின் நிதியொதுக்கீடுகளில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறான உபஉணவுச் செய்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் உபஉணவுப் பயிர்ச்செய்கை தொடர்பில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் 2873 ஹெக்டயரில் இம்முறை உபஉணவுச் செய்கை எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து நிலவுகின்ற வறட்சி காரணமாக 80 ஹெக்டயரில் மாத்திரம் செய்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக நிலக்கடலை, எள்ளு, பயறு, போன்ற பயிர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை 557 ஹெக்டயரில் மிளகாய் செய்கையும் எதிர்பார்க்கப்படுகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாரிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் பதின்மூவாயிரத்து 169 ஹெக்டயர் நிலப்பரப்பிலும் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 540 ஹெக்டயரலும் மானாவாரியாக பத்தாயிரத்து 800 ஹெக்டயரிலும் என 24 ஆயிரத்து 509 ஹெக்டயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.