வவுனியா வடக்கில் பாடசாலை மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

நோர்வே நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் பிரேம்குமார் இராஜேஸ்வரி என்பவரின் நிதியுதவியுடன் சின்னடம்பன் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கரப்புக்குத்தி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அரவிந்தன் தார்மேகன் என்பவருக்கு நேற்றைய தினம் (25.10.2017) வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களினால் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நெடுங்கேணி மகா வித்தியாலய அதிபர் செ.பவேந்திரன் , சமுர்த்தி புளியங்குளம் வங்கி முகாமையாளர்  நாகேந்திரா , கிராம அலுவலர்களான ம .சுரேந்தர் , சி.கரன் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

You might also like