கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்த நபருக்கு கட்டாய சிறைத்தண்டனை

கிளிநொச்சிப் பகுதியில் மதுபானத்தை தன் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, ஏற்கனவே 40 நாட்கள் சமூக சேவையில் ஈடுப்படுமாறு இடப்பட்ட கட்டளையை உதாசீனம் செய்த நிலையில் அவருக்கு 40 நாட்கள் கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்ப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுபானத்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த நபருக்கு சமுதாயம் சார் சீர் திருத்தக்கட்டளையின் கீழ் 40 நாட்கள் சமூக சேவையில் ஈடுப்படுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.

குறித்த நபர் 14 நாட்கள் மாத்திரமே சமூக சேவையில் ஈடுபட்டு 26 நாட்கள் வேலை செய்யாது நீதிமன்றக் கட்டளையை உதாசீனம் செய்தமை தொடர்பில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

You might also like