கிளிநொச்சியில் பொது இடத்தில் ஒழுங்கீனமாக செயற்பட்டவருக்கு நீதிமன்றம் வழங்கி உத்தரவு

கிளிநொச்சிப் பகுதியில் பொது இடத்தில் ஒழுங்கீனமாக செயற்பட்ட நபருக்கு மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒருவரை கைது செய்து, அவருக்கு எதிராக கிளிநொச்சிப் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த நபருக்கு மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like