வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா ஓமந்தை பன்றிக்கொய்தகுளத்தில் இன்று (27.10.2017) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் வீதியிலிருந்த மாட்டுடன் மோதியதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிலுடனும் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணம் மேற்கொண்ட 25வயதுடைய சிந்துஜன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like