வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் திருட்டில் ஈடுபடும் பெண்கள்

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள் நேற்றைய தினம் ஒரு பெண் திருட்டில் ஈடுபடுவது அங்கு பொருத்தப்படிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தினுள் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் ஒரு சில (பெருன்பான்மை இனந்தை சேர்ந்தவர்கள்) பெண்கள் வர்த்தக உரிமையாளரிடம் தண்ணீர் கோருவதுடன் அதனை வர்த்தக நிலைய உரிமையாளர் எடுக்கச் செல்லும் சமயத்தில் அங்குள்ள பொருட்களை திருடி விட்டு செல்வதாகவும் இவ்வாறான பெண்களின் செயற்பாடுகள் தொடர்பில் சிலரை கையும் கலவுமாக பிடித்து பொலிஸ் நிலையத்திலிலும் ஒப்படைந்தும் மறுபடியும் மத்திய பேரூந்து நிலையத்தில் நடமாடிக்கொண்டிருப்பதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவித்தனர்.

தமிழர்கள் செறிந்து வாழும் வவுனியா மண்ணில் பெருன்பான்மை இனத்து பெண்களின் செயற்பாடுகள் வவுனியா பெண்களின் கௌரவித்துக்கு கேடு விளைவிக்கும் முகமாக அமைந்துள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களின் காணோளிகளையும் வர்த்தர்கள் தருவதாக தெரிவித்தனர்.

You might also like