நீதிமன்ற உத்தரவை ஆறு தடவைகள் மீறிய கிளிநொச்சி வர்த்தகருக்கு நேர்ந்த கதி
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் அரச சீல் மதுபானத்தினை பணத்திற்கு விற்பனை செய்த நபருக்கு 25,000 ரூபா தண்டப்பணமும் மூன்று மாத கால கட்டாயச்சிறைத் தண்டனையும் விதித்து நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆறாவது தடவையாகவும் அரச சீல் மதுபானத்தினை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே ஐந்து தடவைகள் சீல் மதுபானத்தினை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.