கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற நிகழ்வு

கிளிநொச்சி பளை மத்திய கல்லுாரியின் மாணவர் பாராளுமன்றின் கன்னி அமர்வு நிகழ்வானது இன்று (27.10.2017) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் பாடசாலை அதிபர்  திரு.சி.பாலகிஷ்ணன் அவர்கள் தலைமையில் பாடசாலை பிரார்த்தணை மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சட்டத்தரணி செல்வி.யோகராசா யோகானந்தி அவர்களும்  சிறப்பு விருந்தினராக பளை கோட்டக்கல்வி அலுவலகர் திரு.ஐ குகானந்தராசா அவர்களும் கௌரவ விருந்தினராக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக  சமூகவிஞ்ஞான ஆலோசகரான திரு.ஜெ.நிஷாகர்  அவர்களும் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் அவர்களால் செங்கோல் கொண்டு வரப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமக்கு உரிய கடமைகளையும் பாடசாலையில் தாங்கள் எனிவரும் காலங்களில் எவ்வாறு அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வரப்போகின்றோம் என்பது பற்றி சபாநாயகர் அவர்களுக்கு  முன்வைத்தனர்.

You might also like