கிளிநொச்சியில் பாலைமர தீராந்திகளை ஏற்றி சென்ற மூவருக்கு அறுபதாயிரம் ரூபா தண்டப்பணம்
கிளிநொச்சிப் பகுதியில் பாலைமர தீராந்திகளை ஏற்றி சென்ற மூன்று பேருக்கு தலா அறுபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 612 ரூபா பெறுமதியான பாலைமர தீராந்திகளை உழவு இயந்திரத்தில் கொண்டு சென்ற மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு நேற்றுய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில், சந்தேகநபர்கள் மூவரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மூவருக்கும் தலா அறுபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.