கிளிநொச்சியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தவருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்தவருக்கு நேற்றைய தினம் 45 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 18 ஆயிரத்து 850 மில்லி லீற்றர் மதுபானம் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக பொலிஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா அவருக்குத் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.