வவுனியாவில் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

வவுனியாவில் தமிழ் விருட்சம் அமைப்பின் ஊடாக வசதியற்ற மாணவர்கள் பத்து பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன

குறித்த நிகழ்வு இன்று (28.10.2017) காலை 10.00 மணியளவில் தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

செரெண்டிப் சிறுவர் இல்லத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். பிரேமராஜ்ஜினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like