வவுனியா மாவட்ட கமக்காரர் அமைப்புக்களை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
வவுனியா மாவட்ட கமக்காரர் அமைப்புக்களை வலுப்படுத்தலும், எதிர்காலத் திட்டங்களை இனங்காணலும் எனும் தலைப்பில் கமக்கார அமைப்பினருக்கான விசேட நிகழ்வு ஒன்று இன்று நடைபெற்றது.
வவுனியா கலாச்சார மண்டபத்தில் வவுனியா மாவட்ட கமக்காரர் ஒழுங்கமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கமக்கார அமைப்புக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் இந்நிகழ்வில் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார், விவசாய விரிவாக்கத்தின் உதவி ஆணையாளர் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.