காதலித்து ஏமாற்றிய முல்லைத்தீவு இளைஞனுக்கு 10 வருட கடூழிய சிறை: வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

16 வயதுக்கு குறைந்த பிள்ளையை காதலித்து கற்பழித்த குற்றத்திற்காக முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று (27.10.2017) 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வித்தித்து தீர்ப்பளித்தது.

முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன் 2011 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் பெண்பிள்ளை ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை காதலித்து ஏமாற்றி கற்பழித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கியுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞன் தன்னை திருமணம் முடிப்பார் என காத்திருந்த பெண் அவர் வேறு திருமணம் முடித்து விட்டார் என்பதனை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டினையடுத்து குறித்த நபரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.

வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று கடந்த 24.08.2017 ஆம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று சாட்சியங்கள் மன்றினால் பரிசீலிக்கப்பட்டு இன்றைய தினம் 27.10.2017 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த இளைஞன் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையை காதலிப்பதாக தெரிவித்து கற்பழித்தமைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பபளிக்கப்பட்டது. அத்துடன் பிறந்த குழந்தைக்கு மூன்று இலட்சம் ரூபா நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாவை செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

You might also like